1.76 லட்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து தமிழனுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய ஆ. ராசாவை படுதோல்வி அடைய
செய்ய வேண்டும். : அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பேச்சு
50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொளுத்தும் வெய்யிலில் வாக்கு சேகரித்தார்
புன்செய் புளியம்பட்டி; ஏப்ரல் 4:
1.76 லட்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து தமிழனுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய ஆ. ராசாவை படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட கனக்கரசம்பாளைம் கிராமத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது இதனை தெரிவித்தார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து தமிழக சுற்றுச்சுழல் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட மாரயிபாளையம்,மாதம்பாளையம்,பெரிய கள்ளிப்பட்டி, மல்லியம்பட்டி, இந்திரா நகர், பெரிய பரிசா பாளையம், தாசம்பாளையம், பொன்னம்பாளையம் அய்யம்பாளையம், கனக்கரசபாளையம், நல்லூர், பனையம்பள்ளி, தேசிபாளையம், வாலிபாளையம், விண்ணப்பள்ளி, சாணார்பதி,செலவனூர், கோடேபாளையம், தொபபம்பாளைம், தொட்டம்பாளையம் வெள்ளியம்பளையம் புதூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்தார். முன்னதாக அதிமுக மோட்டார் சைக்கிள் பேரணியை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
மல்லியம்பட்டி,கணக்கரசம்பாளையம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் அவர் பேசியது:
பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி பகுதியில் வறட்சி நிலவுவதால் விவசாயிகளுக்கு அனைத்து நலத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப் பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்வசிறி வழங்கப்பட்டது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த நிலையில் தேர்தல் வந்ததால் நலத்திட்ட உதவிகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் மீண்டும் நலத்திட்டத் உதவிகள் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்திலேயே பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் தான் முதியோர் ஓயவூதியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக புன்செய் புளியம்பட்டியில் பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை அதிகம். பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மடிக்கணினி, நோட்டு்ப் புத்தகங்கள்,சைக்கிள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கடம்பூர் மலைக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு எஸ்.டி.சான்றிதழ் வழங்கப்பட்டது. பழங்குடி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம். ரூ.20 கோடி செலவில் பவானிசாகர் மீன்குஞ்சு உற்பத்தி பண்ணை, ரூ.35 கோடி செலவில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், சத்தியில் போக்குவரத்து காவல்நிலையம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள. எனவே முதல்வரின் கரத்தை வலுப்படுத்த அதிமுகவை ஆதரியுங்கள்.
நீலகிரி நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதிக்கு செய்தது என்ன? 1.76 லட்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து 21 மாதங்கள் திகார் சிறையில் இருந்தது தான் அவர் செய்த சாதனை. எனவே இந்த தேர்தலில் ஆ. ராசாவை படுதோல்வி அடைய செய்ய வேண்டும். திமுக வேட்பாளர் ராசா வெளியூரைச் சேர்ந்தவர்.ஆனால் அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் குன்னூரைச் சேர்ந்தவர். அவரை எந்த நேரத்திலும் சந்தித்து பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியும் என்றார். கிராமந்தோறும் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சருக்கு கிராமமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்பி வி.கே.சின்னசாமி, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி மாவட்ட அவை தலைவர் நல்லூர் சுப்ரமணியம், நகராட்சி துணை தலைவர் டி.பாபு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட எராளமான அண்ணா தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment