தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, April 6, 2014

கருணாநிதி கை காட்டக் கூடியவர் பிரதமர்; ஸ்டாலின் பேச்சு

 

"கருணாநிதி கை காட்டக் கூடிய ஒருவர்தான், பிரதமராக வரவேண்டும்,'' என்று தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார். - அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் விருதுநகர் வேட்பாளர் ரத்தினவேலுவை ஆதரித்து அவர் பேசியதாவது:

நான் ஹெலிகாப்டரில் வரவில்லை. ரோடு மார்க்கமாக, மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். ஜெ., யானைக்கு வாழைப்பழம் கொடுத்தார். அந்த வாழைப்பழத்தை வாங்காமல், அவரை முட்டி தள்ளியது யான. அது ஏன் என்று தெரியுமா. மக்களை சந்திக்காமல், என்னை ஏன் சந்திக்க வந்தாய், என முட்டியது. ஐந்தறிவு படைத்த யானைக்கு தெரிகிறது. மக்களை சந்திக்க வேண்டும் என, 6 அறிவு படைத்தவருக்கு தெரியவில்லையே.
கருணாநிதி கைகாட்டக் கூடிய ஒருவர்தான், பிரதமராக வரவேண்டும். மரியாதை நிமித்தமாக, ஒருவரை இருகரம் கூப்பி வணங்குகிறோம். இது, தமிழக கலாசாரம். ஆனால், தமிழக அமைச்சர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்டோர், ஹெலிகாப்டர் பறந்தவுடன், வானத்தை நோக்கி வணக்கம் வைக்க வேண்டும். ஹெலிபேட் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். இதுவா தமிழக பண்பாடு.
கூட்டத்துக்கு ஆட்களை காசு கொடுத்து கூப்பிட்டு வருகிறார்கள். காலையில் 10 மணிக்கு உட்கார வைப்பவர்களை, உச்சி வெயிலில் காத்திருக்க வைப்பர். இயற்கை உபாதைகளுக்குக் கூட செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்து, நீங்கள் செய்வீர்களா, செய்வீர்களா என "ஜெ' கேட்பார்.
தேர்தல் நேரத்தில் பால் விலையை குறைப்பேன், பஸ் கட்டணத்தை குறைப்பேன் என்றீர்களே, குறைச்சீர்களா என நீங்க கேட்க வேண்டும். காரியாபட்டியில் 2.6 கோடிக்கு புதிய பணிமனை, உழவர் சந்தை, வருவாய் வட்டம் என பல திட்டங்களை கொண்டுவந்தோம். துவக்கப்பள்ளி 10, நடுநிலைப்பள்ளிகள் 57, உயர்நிலைப்பள்ளிகள் 19, மேல்நிலைப்பள்ளிகள் 83 என, தி,மு,க., ஆட்சியில் கொண்டு வந்தோம். இது உண்மையா, இது உண்மையா என கேட்கிறேன். திருச்சுழியில் துவங்க இருந்த அரசு கலைக்கல்லூரியை, வேறு தொகுதிக்கு கொண்டு சென்றதுமட்டுமில்லாமல், எண்ணற்ற திட்டங்களை கிடப்பில் போட்டு, எதை பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் இந்த ஆட்சிக்கு நீங்கள்தான் ஒரு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.

 

0 comments:

Post a Comment