தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 2, 2014

வைகோ வீட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்



சங்கரன்கோயில்: நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்று சந்தித்து பேசினார். லோக்சபா தேர்தல் இரண்டாவது கட்ட பிரசாரத்தை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று, நெல்லையில் துவக்கினார். இம்முறை, அவரது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்யும் வகையில், பயணத்திட்டம் இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சங்கரன்கோவிலில், தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வரும்படி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அழைப்பு விடுத்தார். அதை, விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார். அதன்படி, தென்காசி ம.தி.மு.க., வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து, சங்கரன்கோவிலில், இன்று மாலை, விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். அதில், வைகோவும் பங்கேற்கிறார்.

0 comments:

Post a Comment