தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 8, 2014

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்: தாளவாடியில் பரபரப்பு




டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தாளவாடியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபுரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மையப்பகுதியான ஒசூர் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது.  பஸ்நிலையம், மருத்துவமனை, பெட்ரோல்பங்க் வரிசையில் இந்த டாஸ்மாக் கடையும் செயல்படுவதால் மதுபான பிரியர்கள் அங்கேயே அருந்திவிட்டு போதையில் தள்ளாடுகின்றனர். அவர்களின் அருவருக்கத்தக்க நடவடிக்கையால் மாணவ,மாணவியர்கள் மற்றும் பெண்கள் அவ்வழியாக செல்ல தயங்குகின்றனர்.

இந்த கடை வேறுபகுதிக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாததால் தாளவாடி பொதுமக்கள் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பை சேர்ந்தவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக திரண்டனர். 

அங்கு வந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி மோகன், தாளவாடி இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தாளவாடி மண்டல துணைவட்டாட்சியர் ஆறுமுகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் குமார.ரவிக்குமார் மற்றும் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் உள்ள எந்தவொரு போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி இல்லை எனக்கூறினர்.

டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

0 comments:

Post a Comment