கர்நாடகாவில் தேர்தல். தமிழக எல்லையில் உள்ள கர்நாடக கிராமமக்கள்
ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
சத்தியமங்கலம், ஏப்.18. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியை ஒட்டி கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மக்களவைத்தொகுதி உள்ளது. 5 ம் கட்டமாக நேற்று கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தனி தொகுதியான சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியில் சாம்ராஜ்நகர், குண்டல்பேட்டை, ஹனூர், கொள்ளேகால்(தனி), டி.நர்சிபுரா(தனி), எச்.டி.கோட்டை, நஞ்சன்கூடு(தனி), வர்ணா ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. இத்தொகுதியில் பாஜக சார்பில் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்பி துருவநாராயண், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் கோட்டை சிவண்ணா ஆகியோரும் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் சார்பில் இருவரும், சுயேச்சைகள் 9 பேர் என மொத்தம் 14 பேர் களத்தில் உள்ளனர். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 14 இலட்சத்து 42 ஆயிரத்து 693 பேர் உள்ளனர். தமிழகப்பகுதியான தாளவாடியை ஒட்டி உள்ள கர்நாடக மாநில கிராமமான கோழிப்பாளையத்தில் நேற்று காலை 7 மணிக்கு சத்தி மைசூர் சாலையில் உள்ள அரசுப்பள்ளியில் அமைக்கட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 751 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தைப்போல் தேர்தலுக்கான பரபரப்பு இல்லாமல் அமைதியான
முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜக வேட்பாளர் கிருஷ்ணமுர்த்தி
தற்போது சிட்டிங் எம்பியாக உள்ள துருவநாராயணிடம் கடந்த 2004 ம் ஆண்டு
நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சந்தேமரஹள்ளி தொகுதியில் 1 ஓட்டில் தோற்றது குறிப்பிடத்தக்கது. அப்போது கிருஷ்ணமுர்த்தி மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்டார். அதன்பின் அவர் பாஜகவில் சேர்ந்ததால் சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment