தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 1, 2014

தாளவாடி மலைக்கிராம கோயில்களில் குண்டம் திருவிழா


 
தாளவாடி மல்லிகார்ஜூனசுவாமி கோயில் குண்டத்தில் நடந்து செல்லும் பூசாரி

சத்தியமங்கலம்,ஏப் 1:
தாளவாடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மல்லிகார்ஜூனசுவாமி கோயில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விழா திங்கள்கிழமை அபிஷேக, ஆராதனையுடன் துவங்கியது. அன்றிரவு சுவாமி அலங்கரிக்கப்பட்ட மலர் சப்பரத்தில் சுவாமி மைசூர் சாலை, திப்பு சர்க்கிள், பஸ்நிலையம், தலமலை ரோடு, ஒசூர் ரோடு, தொட்டகாஜனூர் சாலை, நாயக்கர் வீதி ஆகிய இடங்களில் வீதி உலா வந்தது.

செவ்வாய்க்கிழமை காலை  ஆற்றிலிருந்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும்  நடைபெற்றது.  கோயில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தலைமை பூசாரி மல்லிகார்ஜூன சுவாமி குண்டத்தில் நடந்து சென்றார்.
விழாவையொட்டி கரகாட்டம், புலியாட்டம், பார்வதிகுறவர் நடனம் ஆகிய கலை  நிகழச்சிகள் நடைபெற்றன.
தொட்டகாஜனூர் மண்டையசுவாமி கோயில் விழாவில் இறங்கும் தலைமைபூசாரி சித்தநாயக்கர்


அதேபோல் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள மண்டையசுவாமி கோயிலிலும் குண்டம் திருவிழா நடைபெற்றது. இங்கு நடைபெற்ற விழாவில் தலைமை பூசாரி சித்தநாயக்கர் தலைமையில் 7 பூசாரிகள் குண்டம் இறங்கினர். இவ்விழாக்களில் நர்நாடக மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தாளவாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தாளவாடி மலைப்பகுதிகளில் உள்ள கோயில் குண்டம் விழாவில் கோயில் பூசாரி மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். பொதுமக்கள் குண்டம் இறங்க அனுமதியில்லை. தாளவாடி சிவாலயங்களில் குண்டம் திருவிழா நடைபெறுவதே இதன் தனிச்சிறப்பு

0 comments:

Post a Comment