தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 30, 2014

விபத்துக்களை தடுக்க புதிய யுக்தி: சாலையோர எல்லைக் கோட்டிற்குள் வாகனங்களை நிறுத்த நகராட்சி ஏற்பாடு




போக்குவரத்து இடையூறாகவும் சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை வரிசைப் படுத்தி நிறுத்துக் கொள்வதற்கு வசதியாக சத்தி நகராட்சி சார்பில் மஞ்சள் கயிறு மூலம் எல்லைக் கோடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சத்தி நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். 

சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட புதிய பஸ்நிலையம்,  மைசூர் சாலை, கோபி சாலை மற்றும்  கோவை சாலை ஆகியவை போக்குவரத்து நெரிச்சல் மிகுந்த பகுதியாக உள்ளன.  இங்கு மிகவும் பரபரப்பாக காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில்  சாலைகளின்  இருபுறமும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தங்களது பைக்குகளை ரோட்டில் தாறுமாறுமாக நிறுத்துகின்றனர்.

இதனால், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள், அலுவலர்கள் சாலையோரம் ஒதுங்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து நிமிடத்துக்கு நிமிடம்  வெளியேறும் பேருந்துகள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடபடி சாலையோரத்தில் இரு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் நெரிச்சல் மிகுந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்க, சத்தி காவல் துறை மற்றும் சத்தி நகராட்சி ஆகியவை இணைந்து இரு சக்கர வாகனங்களை நிறுத்த எல்லைக் கோடு நிர்ணயம் செய்துள்ளன.  சாலையோரத்தில் பைக்குள் நிறுத்திக்கொள்ள வசதியாக அரை கி.மீ தூரம் வரை மஞ்சள்கயிறு கொண்டு எல்லைக்கோடு அமைத்துள்ளன. இது பிற பகுதிகளுக்கும்  நீடிக்கும். இந்த கோட்டிற்குள் மட்டுமே வாகனங்கள் நிறுத்த வேண்டும் என்றும் அதனை தாண்டி நிறுத்தும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சத்தி நகராட்சி ஆணையாளர் கே.சரவணக்குமார் புதன்கிழமை தெரிவித்தார். நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால் பஸ்நிலையம் எதிர்புறம் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்த தயாராகி விட்டனர்.

0 comments:

Post a Comment