புன்செய் புளியம்பட்டி பவானிசாகர் தொகுதிக்கு உட்பட்ட நல்லூர் கிராமத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் வாக்குகள் சேகரிக்கும் போது நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஏற்பட்டுள்ள அவபெயரை நீக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே சின்னசாமி, பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ.பழனிசாமி முன்னிலை வகித்தனர்.
நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் பேசும் போது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கரத்தை வலுபடுத்த தொண்டர்கள் ஆகிய நீங்கள் தீவிரமாக பாடுபட வேண்டும். தொகுதி மக்களாகிய உங்கள் வளர்ச்சியே என் வளர்ச்சி என தொகுதிக்கு பாடுபடுவேன். ஜனநாயக நாட்டில் வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை நீங்கள் தவறாமல் பயன்படுத்த வேண்டும். வாக்கு உங்களுடைய சொத்து. அதை நல்லவர்களுக்கு பயன்படுத்த வேண்டும். திகார் சிறை சென்ற ராசாவுக்கு பயன்படுத்த கூடாது. இன்று தேசிய அளவில் அனைவரும் உற்று நோக்கும் தொகுதி நீலகிரி. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த கறைபடிந்த ஆ. ராசா இங்கு மீண்டும் போட்டி இடுகிறார். அவரால் இந்த நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு ஏற்பட்ட அவபெயரை நீக்க விலை மதிக்க முடியாத உங்கள் வாக்கினை வெற்றி சின்னம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து இந்த மண்ணின் மைந்தனாகிய என்னை மாபெரும் வெற்றி பெற செய்யவேண்டும் என வாக்காளர்களின் பொற்பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பிரச்சாரத்தில் மாவட்ட அவை தலைவர் நல்லூர் சுப்பிரமணியம், ஒன்றிய குழு துணை தலைவர் ஒ. வேலுமணி, நகராட்சி துணை தலைவர் டி.பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈஸ்வரன், மயிலாள் சம்பத், கணேசன், வெள்ளிங்கிரி, புலி நாகராஜ் மற்றும் ஊராட்சி செயலர்கள் பாலகிருஷ்ணன், ராமசாமி உள்ளிட்ட ஏராளமான அண்ணா தி.மு.க தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.


0 comments:
Post a Comment