பவானிசாகர்: மாங்கனிகள் திருட்டை தடுக்க மீன்வலை வேலி
பவானிசாகர்
மண்டல ஊரக வளர்ச்சி நிறுவன வளாகத்தில் உள்ள மாமரங்களில் காய்த்து தொங்கும்
மாங்கனிகளை பிறர் பறித்து செல்லாதபடி மீன்வலையை வேலியாக அமைத்து
பாதுகாத்துள்ளனர்.
பவானிசாகரில் அரசு நிறுவனமான மண்டல ஊரக
வளர்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஊரக
வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இந்நிறுவன வளாகத்திற்குள் பவானிசாகர் - பண்ணாரி சாலையை ஒட்டி 10 க்கும்
மேற்பட்ட மாமரங்கள் உள்ளன. இம்மரங்களில் தற்போது மாங்காய்கள்
கொத்துக்கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. மரத்தில் விளையும் மாங்காய்கள்
ஏலம் விடப்பட்டுள்ளது.
கைக்கு எட்டும் உயரத்தில் கனிகள் தொங்குவதால்
சிறுவர்கள் மற்றும் சாலையில் செல்வோர் மாங்காய்களை பறித்து சென்று
விடுகின்றனர். இதனை தடுக்க, ஒப்பந்ததாரர் புதிய யுக்தியை கையாண்டு
சாலையோரம் சவுக்குகுச்சிகளை நட்டு பழைய மீன்வலைகள் கட்டியுள்ளார்.
மீன்வலையை தாண்டி மாங்காய் பறிக்க இயலாததால் மாங்காய்கள் திருட்டு போவது
தடுக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment