பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் உயி்ர்த் தண்ணீர் திறப்பு
சத்தியமங்கலம்,ஏப் 2:
பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் புதன்கிழமை உயிர்த் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஈரோடு
மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. அணையின்
மூலம் 2 லட்சத்துக்கு 7 ஆயிரம் நன்செய் மற்றும் புன்செய் பாசன நிலங்கள்
பயன்பெறுகின்றன.தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதாலும்
தெங்குமரஹாடா, நீலகிரி வனத்தில் வறட்சி நிலவுவதால் அணைக்கு நீர்வரத்து
குறைந்து விநாடிக்கு 620 கனஅடியாக உள்ளது.
தற்போது, மோயாற்று நீர்வரத்துதான் அணையின் முக்கிய
நீர்வரத்தாக உள்ளது. அணையில் இருந்து ஆற்றுக்கு 150 கனஅடிநீர்
திறந்துவிடப்படுகிறது.கீழ்பவானி பாசன விவசாயப் பகுதியில் உள்ள விவசாய
நிலங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதால் விவசாய கிணறுகளில்
நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. கால்நடைகளுக்கு குடிக்க
தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும் என்பதால் கீழ் பவானி வாய்க்காலில் உயிர்த்
தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பவானிசாகர் அணையில்
இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு புதன்கிழமை மாலை 4 மணிக்கு 500 கனஅடி நீர்
திறந்துவிடப்பட்டது. இந்த நீர்திறப்பு படிப்படியாக அதிகரித்து
வியாழக்கிழமை 2300 கனஅடியாக உயரும்.
இதன் மூலம் காய்ந்து கிடக்கும் விவசாயப்பயிர்கள் புத்துயிர் பெறுவதுடன் கால்நடைகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யமுடியும்
0 comments:
Post a Comment