அதிமுக வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக சத்தியில் அதிமுகவினர் வாக்குசேகரிப்பு
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக சத்தியில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.கோபால கிருஷ்ணனுக்கு ஆதரவாக சத்திமங்கலம் நகர்ப்பகுதியில் அதிமுவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். சத்தி எஸ்ஆர்டி கார்னரில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

கோவிந்தராஜபுரம், நெசவாளர் காலனி, மைசூர் டிரங் ரோடு, நேருநகர்,
கோட்டூவீராம்பாளையம், கடைவீதி, தோப்பூர் காலனி உள்ளிட்ட 27 நகராட்சி
வார்டுகளில் வீதி,வீதியாக திறந்த வேனில் அதிமுக வேட்பாளர்
சி.கோபாலகிருஷ்ணன் வாக்குசேகரித்தார். அதிமுக செய்த சாதனைகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் விலையில்லா பொருள்கள் வழங்குதல் போன்ற சாதனைகளை விளக்கி அவர்கள் வாக்கு சேகரித்தனர். இதில் ஈரோடு மாவட்ட் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், ஈரோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.பி. வி.கே.சின்னச்சாமி,சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆடிட்டர் ஆர்.சிவக்குமார், டி.கே.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment