அம்மா வாய்ஸ் - தொலைபேசி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபடும் அதிமுக
நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இளம் வாக்காளர்களைக் கவர
வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளின்படி,
அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, ஒரு தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், ஜெயலலிதா, பொதுமக்களிடம்
வாக்களிக்கக் கோரும் பிரச்சாரத்தை கேட்கலாம். அம்மாஸ் வாய்ஸ் என்னும் இந்த
தேர்தல் பிரச்சார சேவையில், 24 மணி நேரமும் கேட்கக் கூடிய, வாக்காளர்களைக்
கவரும் விதத்தில் அமைந்துள்ளது.
இது மட்டும் அல்ல, வாக்காளர்கள் ஒவ்வொரு முறை தொடர்பு கொள்ளும்போதும்
ஜெயலலிதாவின் வெவ்வேறு கருத்துகள் 30 வினாடிகள் ஒலிபரப்பப்படுகின்றன என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், அரசியல் கட்சி ஒன்று, இதுபோன்ற தொலைபேசி வாயிலான பிரச்சாரத்தை துவக்கியிருப்பது முதல் முறையாகும்

0 comments:
Post a Comment