தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 1, 2014

வேட்டை நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான்கள் சாவு

 
சத்தியமங்கலம், ஏப் 2:
சத்தியமங்கலம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 2 புள்ளிமான்கள் பலியாயின..

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பீக்கிரிபாளையம் ஓடைபுறம்போக்கு பகுதியில் மான்கள் இறந்து கிடப்பதாக  நேற்று கிடைத்த நேற்று தகவலையடுத்து சத்தியமங்கலம் வனச்சரகர் எஸ். சண்முகம் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர்.

வனத்தையொட்டியுள்ள கரடு முரடான பகுதியில் உடலில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த  11 வயதுள்ள ஆண் மற்றும் பெண் புள்ளிமானை அவர்கள் கைப்பற்றினர். மான்கள் எப்படி இறந்ததன என்பது குறித்து வனத்துறையினர் அங்குள்ள கிராமமக்களிடம் விசாரித்தனர். விசாரணையில், வேட்டைநாய்கள் மான்களை கடித்து குதறியதால் அவை இறந்துள்ளது தெரியவந்தது.

 சிக்கரசம்பாளையம் விஏஒ  ஜானகிராமன் முன்னிலையில் உதவி கால்நடை மருத்துவர்  திருவேங்கடம் இறந்த கிடந்த மான்களின் சடலத்தை நேற்று அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தார். அதில்,  வேட்டை நாய்கள் கடித்து குதறியதில் மான்கள் செத்தது  தெரியவந்தது. வேட்டைநாய்கள் மூலம்  மான்களை வேட்டையாடும் கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டார்களா?  தெருநாய்கள் மான்களை வேட்டையாடியதா? என்பது பற்றி வனத்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment