தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 1, 2014

மேட்டுபாளையம் வழக்கறிஞர்  சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.
 
ஆர்.ஏ.கனகசுந்தரம் மீண்டும் தலைவராக தேர்வு.
 
 
மேட்டுப்பாளையம்.ஏப்ரல்.1.மேட்டுப்பாளையம் வழக்கறிஞர் சங்கத்தின் 2014-2015 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.தேர்தல் அதிகாரிகளாக மூத்தவழக்கறிஞர்கள் வி.கிருஷ்ணமூர்த்தி.எஸ்.வீரபத்திரன்  ஆகியோர் முன்னின்று தேர்தலை நடத்தினார்கள். 2014-2015 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக தலைவர் ஆர்.ஏ.கனகசுந்தரம், உதவிதலைவராக கே.உம்மர் பாரூக், செயலாளராக ஆர்.சிவக்குமார், இணைச்செயலாளர் பி.ரங்கராஜ், பொருளாளராக ஆர்.பழனிசாமி,செயற்குழு உறுப்பினர்களாக வி.பாலசுப்பிரமணி, ஆர்.திருமூர்த்தி, வி.செந்தில்குமார், பி.தண்டபாணி, ஏ.வீரபிரபு, பி.சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை வழக்கறிஞர் சங்க முன்னாள் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 
மேட்டுப்பாளையம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முயற்சியால் புதிய நீதிமன்ற கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளது என தலைவர் ஆர்.ஏ.கனகசுந்தரம் தெரிவித்தார். நீதிமன்றத்தில் முன்சீப் கோர்ட் தனியாக இயங்கவும், அன்னூர், பெரிய நாயக்கன் பாளையம் வரையரைகளுக்கு உட்பட்ட சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மேட்டுப்பாளையம் ஆள்வரைக்கு கொண்டுவரவும் வழக்கறிஞர்களுக்கு "வழக்கறிஞர் கூடம்" கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 comments:

Post a Comment