தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, January 3, 2015

அன்னூர் புத்தக திருவிழா துவங்கியது

 


அன்னூர் ஜனவரி 3:

புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் மற்றும் அன்னூர் ரோட்டரி சங்கம் சார்பில் அன்னூரில் முதல்முறையாக புத்தக திருவிழா அன்னூர் பஸ்நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ தாசபலஞ்சிக பின் திருமண மண்டபத்தில் துவங்கியது.

விடியல் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். அன்னூர் ரோட்டரி சங்க தலைவர் கே.சி.சுந்தரம் தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை அன்னூர் வட்டாச்சியர் இந்திரா துவக்கி வைத்தார். திரு காளியப்பன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மின்துறை உதவி செயல் பொறியாளர் எம்.சுப்பிரமணியம் முதல் விற்பனையை பெற்று கொண்டார்.

அன்னூர் புத்தக திருவிழா கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் , விகடன் பதிப்பகம், தமிழ் தேசம் புத்தக நிலையம், ஸ்டுடண்ட் புக் ஹவுஸ், லாவா புக்ஸ், ரீடிங் இந்தியா புக்ஸ்,  விவேகானந்தா புத்தகாலயம்  உள்ளிட்ட 25 இகும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் புத்தக அரங்கங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு  தலைப்புகளில் இலட்சகணக்கான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கபட்டுள்ளது. கல்வி குறுந்தகடுகளும் கிடைக்கும். புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 % சிறப்பு தள்ளுபடி வழங்க படுகிறது.
தினசரி மாலை 6 .30 மணிக்கு  தலை சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் சிறப்பு சொற்பொழுவுகள் நடைபெறுகிறது. ஜனவரி 4 ஆம் தேதி பட்டிமன்ற பேச்சாளர் கோவை தனபால்  பேசுகிறார்.ஜனவரி 5 ஆம் தேதிஜாலசக்கரவர்த்தி எம்.யோனா அவர்களின் மாயாஜால் மேஜிக் ஷோ நிகழ்ச்சி நடைபெறுகிறது.  ஜனவரி 6 ஆம் தேதி கு.அருள்வேல்  பேசுகிறார். ஜனவரி 7ஆம் தேதி நிறைவு விழாவில் தன்னம்பிக்கை பேச்சாளர் இயகோகா சுப்பிரமணியம்   பேசுகிறார்.

அன்னூர் புத்தக திருவிழாவின் ஐந்து  நாட்களிலும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும்,  பொதுமக்களும், மாணவ மாணவியர்களும் திரளாக கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன் கேட்டு கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment