அனைத்து குடும்பங்களுக்கும் வீடு, குடிநீர், அடிப்படை வசதி கிடைக்கும்: அடுத்த 10 ஆண்டுகளில் நிறைவேற்ற மோடி உறுதிமொழி
முசாபர்பூர்: ''மத்தியில், எங்கள் தலைமையிலான ஆட்சியில், வரும், 10 ஆண்டுகளில், நம் நாட்டில் உள்ள ஏழைகளின் அடிப்படை தேவைகள் நிறைவேறும். ஒவ்வொரு குடும்பத்துக்கும், வீடு, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றித் தருவதே, எங்களின் கனவு,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, உறுதியுடன் பேசினார்.
பீகார் மாநிலம், முசாபர்பூரில் நேற்று நடந்த, பா.ஜ., லோக்சபா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி பங்கேற்றார். சமீபத்தில், பா.ஜ.,வுடன் இணைந்த, ராம்விலாஸ் பஸ்வான், அவர் மகன் சிராக் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். லட்சக்கணக்கில் திரண்டிருந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில், பீகார் மாநிலம் வளர்ச்சி அடையாமல் இருப்பதையும், மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், என்ன திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்பது குறித்தும், மோடி, விரிவாக பேசினார்.
அவர் பேசியதாவது: ராம்விலாஸ் பஸ்வான், பா.ஜ., கூட்டணியில், மீண்டும் இணைந்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. நற்பண்புகளை உடையவர், பஸ்வான். ஒரு சில தலைவர்கள் (நிதிஷ்குமார்), பூட்டிய அறைக்குள் நடக்கும் கூட்டங்களில், என்னுடன் கை குலுக்குவர். ஆனால், பொது இடங்களில், என்னுடன் இணைந்திருப்பதையும், ஒன்றாக, புகைப்படத்துக்கு, 'போஸ்' கொடுப்பதையும், அவர்கள் தவிர்ப்பர். இவர்கள், வஞ்சக எண்ணம் உடையவர்கள். ஆனால், பஸ்வான், அப்படிப்பட்டவர் அல்ல; சிறந்த மனிதர். இங்கு திரண்டுள்ள மக்களுக்கு, என்னைப் பற்றிய விஷயங்களை கூற விரும்புகிறேன். நான், ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். அரசியல் தீண்டாமையால் பாதிக்கப்பட்டவன். எதிர்காலத்தில், முள் கிரீடத்தை அணியும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கப் போகிறவன். அடுத்தாண்டு முதல், 'மோடி தான், எங்கள் தலைவர்' என்பதை, நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கூறப்போகின்றனர். 'இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும்' என்கிறேன், நான். ஆனால், எதிர்க்கட்சியினர், 'மதவாதம், அபாயம்' என்கின்றனர். அது போல், ஏழைகளுக்கு உணவு வேண்டும் என்கிறேன், நான். ஆனால், அவர்கள், 'மதவாதம் அபாயமானது' என்ற வார்த்தையை, திரும்ப திரும்ப கூறுகின்றனர். நாட்டை வளர்ச்சிப் பதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என், நோக்கம். ஆனால், மோடியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே, எதிர்க்கட்சிகளின் நோக்கமாக உள்ளது. நாட்டின் பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்ற, எண்ணம் தான் எனக்கு ஏற்படுகிறது. ஆனால், மதச்சார்பின்மை பேசும் கட்சிகளோ, மோடிக்கு முட்டுக்கட்டை போடுவதை பற்றித் தான் சிந்திக்கின்றன. பீகாரில் தற்போதுள்ள நிதிஷ்குமார் அரசு, மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து பேசியுள்ளனவா? ஏழைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு வரப்போகிறது; அடுத்த, 10 ஆண்டுகள், ஏழைகள் ஆண்டாக இருக்கும். எங்கள் தலைமையில், மத்தியில் அமையும் அரசு, வரும், ஆண்டுகளில், ஏழைகளுக்கான உரிமைகள் பெற்றுத் தரும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும், வசிப்பதற்கு தகுந்த வீடு, குடிநீர், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும்.
பீகார் மாநிலம், பயங்கரவாதிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. ஓட்டு வங்கி அரசியல் தான், இதற்கு காரணம். ஒரு சிலரை, திருப்திபடுத்துவதற்காக, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் மீது, மென்மையான போக்கை, பீகார் மாநில, ஐக்கிய ஜனதா தளம் அரசு, பின்பற்றுகிறது. மூன்றாவது அணி அமைக்கப் போவதாகக் கூறும் கட்சிகள், மறைமுகமாக, காங்கிரசுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு, மோடி பேசினார்.
உங்களுடன் இருந்தால் நல்லவன்; இல்லையெனில் கெட்டவனா? லோக் ஜனசக்தி கட்சித் தலைவர், ராம்விலாஸ் பஸ்வான் பேசியதாவது: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவும், காங்கிரஸ் தலைவர்களும், என் மீது கோபமாக உள்ளனர். அவர்களுடனான உறவை, நான், துண்டித்தது தான், இதற்கு காரணம். என்னைப் பற்றி, அவதூறாக பேசி வருகின்றனர். இதற்காக, நான் கவலைப்படப் போவது இல்லை. அவர்களுடன் சேர்ந்தால், நான், நல்லவன்; இல்லையெனில் கெட்டவனா? என்னை பொறுத்தவரை, யாரையும் அவமதிக்கக் கூடாது என்ற கொள்கையைப் பின்பற்றுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

சிறந்த மனிதர்:

மென்மையான போக்கு:

0 comments:
Post a Comment