மேட்டுப்பாளையம் தொகுதி அண்ணா தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்.
வேட்பாளர் சி..கோபாலகிருஷ்ணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய கடுமையாக உழைக்க அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் வேண்டுகோள்.
மேட்டுப்பாளையம்.மார்ச்.15.
மேட்டுப்பாளையம் தொகுதி அண்ணா
தி.மு.க.செயல் வீரர்கள் கூட்டம், தொகுதி பொறுப்பாளர் மற்றும் அமைப்பு
செயலாளர் ஏ.கே.செல்வராஜ் தலைமையில் நடந்தது. கோவை மாநகர் மாவட்ட செயலாளர்
மேயர் செ.ம.வேலுசாமி, அர்ஜுனன் எம்.பி,முன்னாள் அமைச்சர் மில்லர் ,நீலகிரி
மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மேட்டுப்பாளையம் தொகுதி செயலாளர்
எம்.எஸ்.ராஜகுமார்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற துணை சபாநாயகர்
பொள்ளாச்சி ஜெயராமன்,அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திரைப்பட இயக்குனர்
ஆர்.வி.உதயகுமார், ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் செயல்வீரர்கள் எப்படி
செயல்படவேண்டும் என ஆலோசனை வழங்கினார்கள்.நீலகிரி தொகுதி பொறுப்பாளர்
ஏ.கே.செல்வராஜ் பேசும்போது,தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாரத பிரதமராக்க 40
தொகுதிகளிலும் வெற்றி பெற அனைவரும் அயராது பாடுபட வேண்டும். நீலகிரி
தொகுதியில் அதிக ஓட்டுகள் பெற்றுத் தந்து நீலகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா
தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணன் வெற்றிக்கு
பாடுபடவேண்டும்.மேட்டுப்பாளையம் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுதந்து
பெருமை சேர்க்கவேண்டும். அண்ணா தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு
சேகரிக்கவேண்டும். வெற்றிக்கனியை முதல்வர் காலடியில் சமர்ப்பிக்க அனைவரும் ஒற்றுமையுடன்,கடுமையாக உழைக்கவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில்,மேட்டுப்பாளையம்
நகர செயலாளர் ஏ.வான்மதி சேட்,கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்
சா.ஞானசேகரன்,மாவட்ட கவுன்சிலர் பி.டி.சிவசாமி, சிறுமுகை செயலாளர்
பி.ரேணுகராஜன், காரமடை பேரூராட்சி செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி ,பேரவை
செயலாளர் லோகநாதன்,கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் மைதானம்
சந்தானம், கருணாகரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.வெள்ளிங்கிரி, தமிழகம்
சேட்,ஹபிபுர் ரஹிமான், எஸ்.கே.அருண், வி.ராஜேஷ், கே.ஆர்.ரங்கராஜ், மணிகண்டன், பி.எஸ்.கே.ராஜேஷ், பிரபு, பெள்ளே
பாளையம் ஊராட்சி தலைவர் கே.ஆறுமுகம்,துணைத்தலைவர் எஸ்.பாலு,ஊராட்சி
செயலாளர் பி.எஸ்.ரங்கராஜன்,சிறுமுகை சேகர், முருகேஷ், பி.எஸ்.ரங்கசாமி, பி.டி.ஆர்.தங்கராஜ்,சுப்பிரமணி,ஆர்.பொன்னுசாமி,ராமன்னார்,உட்பட
ஊராட்சி தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள்,ஊராட்சி
செயலாளர்கள், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.,முடிவில் காரமடை ஒன்றிய அண்ணா
தி.மு.க.செயலாளர் பி.டி.கந்தசாமி நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment