தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, March 12, 2014

புன்செய் புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில்
கட்சி கொடிக்கம்பங்கள்,
சுவர் விளம்பரங்கள், ப்ளெக்ஸ் போர்டுகள் அகற்றம்


புன்செய் புளியம்பட்டி ,மார்ச் 12:

மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தபட்டதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், சுவர் விளம்பரங்கள்  மற்றும் ப்ளெக்ஸ் போர்டுகள் அகற்றும் பணிகள் புன்செய் புளியம்பட்டியில் நடைபெற்றது.

தேர்தல் நேரத்தில் சாலை ஓரங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வரையப்பட்டுள்ள விளம்பரங்களின் மீது மை பூசுதல், அரசியல் விளம்பர ப்ளெக்ஸ் போர்டுகள் அகற்றும் பணிகள் புன்செய் புளியம்பட்டி நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தங்கள் கட்சி கொடிக்கம்பங்களை தாங்களாகவே அகற்றிகொள்ளும்படி அறிவுறுத்தபட்டது. அதனை தொடர்ந்து அரசியல் கட்சிகளும் தாங்களாகவே முன்வந்து கொடிக்கம்பங்களை அகற்றினர். மீதமுள்ள சில கொடிக்கம்பங்களை நகராட்சி ஆணையாளர் செந்திவேல் தலைமையில் ஊழியர்கள் அகற்றினர். மேலும் தனியார் சுவர்களில் எழுதப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை சுண்ணாம்பு பூசி அழிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

0 comments:

Post a Comment