தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, March 11, 2014

பண்ணாரி அம்மன் திருவிழா சிறப்பு பஸ்கள் இயக்கம்

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் மறுபூஜை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஈரோடு மண்டலத்தின் சார் பில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா 17 மற்றும் 18ம் தேதிகளிலும், மறுபூஜை 24ம் தேதியும் நடைபெறவுள்ளது. 

இதையொட்டி, திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, மைசூர், நம்பியூர் ஆகிய பகுதிகளில் இருந்து பண்ணாரிக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் ஈரோடு மண்டலத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சிறப்பு பஸ்களின் வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளு மாறு கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment