மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் தேரோட்டம்.
நகரமன்ற தலைவர், அறநிலையத்துறை அதிகாரிகள் வடம் பிடித்து துவக்கிவைத்தனர்..
மேட்டுப்பாளையம்.மார்ச்.20.
மேட்டுப்பாளையம்
மைதானம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் 87 ஆம் ஆண்டு திருவிழாவில் நேற்று 19
ந்தேதி மாலை தேரோட்டம் நடந்தது.முன்னதாக ஏராளமான பெண்கள் மாவிளக்கு
எடுத்துவந்து அம்மனுக்கு படைத்தது வழிபட்டனர்.மாலை 7 மணிக்கு மாரியம்மன்
திருத்தேருக்கு எழுந்தருளினார். இரவு 8 மணிக்கு தேர் வடம் பிடிக்கும்
நிகழ்ச்சி துவங்கியது.மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர்
டி.சதீஷ்குமார்,அறநிலையத்துறை செயல் அலுவலர் பெ.ராதாகிருட்டினன், ஆய்வாளர்
பால்ராஜ்,மேலாளர் ராம்ராஜ், புலவர் குருந்தாசலம், முன்னாள் அறங்காவலர்கள்
பாலன், மருதையன், சத்யபிரகாஷ், நகரமன்ற உறுப்பினர்கள் கே.வெள்ளிங்கிரி, சூரியபிரகாஷ், மோகன்குமார், மற்றும் மைதானம் சந்தானம்,கிழங்கு,மற்றும் தற்காரி மண்டி உரிமையாளர்கள்,எழுத்தர்கள்,தொழிலாளர்கள்,பொதுமக்கள்
தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தேர் ,மெயின் ரோடு,நெல்லிதுறை ரோடு,வழியாக
இரவு 9 மணிக்கு கோவிலை அடைந்தது.பின்னர் அம்மனுக்கு கோவில் தலைமை பூசாரி
மோகன்குமார் தலைமையில் பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.மேட்டுப்பாளையம்
போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி, தலைமையில் எஸ்.ஐ.சிவக்குமார் மற்றும்
போலீசார் ,ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


0 comments:
Post a Comment