தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, March 16, 2014

வங்கதேச சுழலில் சுருண்டது ஆப்கானிஸ்தான்




மிர்புர்: ‘டுவென்டி–20’ உலக கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய வங்கதேச அணி, ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. வங்கதேச அணிக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் கைகொடுத்தனர்.                   
வங்கதேசத்தில், 5வது ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று துவங்கியது. மிர்புரில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு ‘சூப்பர்–10’ தகுதிச் சுற்றுப் போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.    
              
சாகிப் துல்லியம்: ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது சேஷாத் (0) ஏமாற்றினார். ஆட்டத்தின் 6வது ஓவரை வீசிய சாகிப் அல் ஹசன், ‘இரட்டை அடி’ கொடுத்தார். இவரது ‘சுழலில்’ 2, 3வது பந்துகளில் குல்பதின் (21), நஜீப் (7) அடுத்தடுத்து வெளியேறினர். நான்காவது பந்தை கேப்டன் முகமது நபி தடுத்தாடு, ‘ஹாட்ரிக்’ வாய்ப்பு நழுவியது.     
     
அப்துர் ரசாக் ‘சுழலில்’ முகமது நபி (3) நடையை கட்டினார். ‘மிடில்–ஆர்டரில்’ கரிம் சாதிக் (10), ஷபிகுல்லா (16) நிலைக்கவில்லை. அடுத்து வந்தவர்கள் ஏமாற்ற, ஆப்கானிஸ்தான் அணி 17.1 ஓவரில் 72 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 3, அப்துர் ரசாக் 2 விக்கெட் கைப்பற்றினர்.            

அனாமுல் அபாரம்: எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், அனாமுல் ஹக் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டக்கு 45 ரன்கள் சேர்த்த போது தமிம் இக்பால் (21) அவுட்டானார். அபாரமாக ஆடிய அனாமுல் ஹக், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். வங்கதேச அணி 12 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. அனாமுல் ஹக் (44), சாகிப் (10) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை சாகிப் அல் ஹசன் வென்றார்.

சரியான பதிலடி      
சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று நடந்த தகுதிச் சுற்றுப்  போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று, பழிதீர்த்துக் கொண்டது.  
    
குறைந்த ஸ்கோர்      
நேற்று 72 ரன்களுக்கு சுருண்ட ஆப்கானிஸ்தான் அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில், குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணிகள் வரிசையில் 6வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடத்தில் 56 (எதிர்–ஆப்கானிஸ்தான்), 67 (எதிர்–அயர்லாந்து) ரன்களுக்கு சுருண்ட கென்யா அணி உள்ளது.      
* இது, சர்வதேச ‘டுவென்டி–20’ வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணியின் மிகக் குறைந்த ஸ்கோர். முன்னதாக தென் ஆப்ரிக்கா (2010), இங்கிலாந்து (2012) அணிகளுக்கு எதிரான போட்டிகளில், தலா 80 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது.      

முதன்முறை      
ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்கதேச அணி, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் முதன்முறையாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக 2012ல் நெதர்லாந்துக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிறந்த வெற்றியாக இருந்தது.      

* தவிர இது, ‘டுவென்டி–20’ போட்டிகளில் வங்கதேசத்தின் 10வது வெற்றி. இதுவரை விளையாடிய 34 போட்டியில் 10 வெற்றியை பெற்றது. மீதமுள்ள 24 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

 

0 comments:

Post a Comment