பு.புளியம்பட்டி,பவானிசாகர் பகுதி காவல்நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகளின் படி, பு.புளியம்பட்டி,பவானிசா கர் பகுதி காவல்நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டன.
நாடாளுமன்ற
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்
சட்டம்,ஒழுங்கினை கருத்தில் கொண்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும்
பொருட்டு, துப்பாக்கிகள் வைத்திருத்தல் மற்றும் கொண்டுசெல்லுதல் தடை செய்து
உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும்,துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ளவர்கள்,தங்களின் துப்பாக்கிகளை சம்பத்தப்பட்ட காவல்நிலையங்களி ல் ஒப்படைத்து அதற்குரிய ரசீதினை பெற்றுகொள்ளுமாறு உத்தரவிடப்பட் டிருந்தது.
அதன்படி,பு.புளியம்பட்டி காவல்நிலைய பகுதிகளில் மொத்தம் 21
பேர் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் உள்ளனர்.அதே போல பவானிசாகர்
காவல்நிலைய பகுதியில் மொத்தம் 9 பேர் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள்
உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்கள் துப்பாக்கிகளை பு.புளியம்பட்டி
மற்றும் பவானிசாகர் காவல்நிலையங்களில் ஒப்படைத்து விட்டனர்.என
பு.புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் பவானிசாகர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)
தங்கவேல் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment