தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, March 11, 2014

நோ பார்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் பண்ணாரி கோவிலுக்கு வரும் பொதுமக்கள் அவதி.


 
புகழ்பெற்ற பண்ணாரியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. லட்சகணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தந்து பண்ணாரியம்மனை தரிசித்து செல்வர். பண்ணாரியம்மன் திருக்கோவில் பூச்சாட்டுதல் துவங்கிய பின் நாள்தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு முன் வாகனங்களை நிறுத்த கூடாது என்ற அறிவிப்பு வைக்கப்பட்டு உள்ளது. இருந்தும் நோ பார்கிங்கில் நிறுத்தப்படும் வாகனங்களால் பண்ணாரி கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். போக்குவரத்தும் பாதிக்கபடுகிறது. எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்த அறிவுறுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment