உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் பறிமுதல்
![]() |
| மக்களவை தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தபட்டதை அடுத்து புன்செய் புளியம்பட்டி பேருந்தில் தணிகையில் ஈடுபட்டுள்ள போலீசார் |
உரிய ஆவணங்கள் இன்றி மினிவேனில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.1 லட்சம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல்
விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பு.புளியம்பட்டியில் பறக்கும்படை
அலுவலர் கே.பாரதி தலைமையில் செவ்வாய்க்கிழமை வாகனத்தணிக்கையில்
ஈடுபட்டனர்.அப்போது,பேருந்து நிலையம் அருகே சென்ற மினிவேனை நிறுத்தி
சோதனையிட்டதில் பு.புளியம்பட்டி சுப்பராயன்வீதியைச் சேர்ந்த அவனாசிலிங்கம்
என்பவர் ரூ.1 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி
ரொக்கம் எடுத்து சென்றதால் அதனை பறிமுதல் செய்த போலீஸார் சத்தி
கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

0 comments:
Post a Comment