- சீரான குடிநீர் விநியோகம்
பவானிசாகர்
அடுத்துள்ள பண்ணாரி கோவிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை
தேக்க தொட்டி அமைக்க பட்டு குடிநீர் விநியோகம் செய்ய பட்டு வருகிறது.
பவானிசாகர் அடுத்துள்ள பண்ணாரி கோவில் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்களின் குடிநீர் தேவைக்காக பண்ணாரியம்மன் கோவில் நிர்வாகத்தின் மூலம் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது பணிகள் நிறைவு பெற்று கோவில் வளாக பகுதிகளில் 20 இடங்களுக்கும் மேலாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கோவில் பொறியாளர் சுகுமார் கூறும் போது பண்ணாரி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு கோவில் நிர்வாகம் மூலம் 2 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதன் மதிப்பீடு ரூ.2 கோடி ஆகும். இதற்காக பவானிசாகர் அணையிலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு குழாய்கள் மூலம் வரும் தண்ணீரை கீழ்நிலை தேக்க தொட்டியில் சேகரித்து பின்னர் சுத்திகரிக்க பட்டு தூய்மையான குடிநீராக மேல்நிலை குடிநீர் தொட்டியில் சேகரிக்க படுகிறது. மேலும் குண்டம் முன்புற பகுதி, அன்னதான மண்டபம், கருணை இல்லம், தெப்பகுளம், தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட 20 கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் பக்தர்களுக்கு தங்கு தடையின்றி 24 மணிநேரமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

0 comments:
Post a Comment