பண்ணாரிஅம்மன் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்
![]() |
| கருத்தரங்கில் பேசுகிறார் மருதம் குழுவின் துணைத் தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன்.உடன்,துறைத் |
சத்தியமங்கலம்,மார்ச் 13:
பண்ணாரிஅம்மன்
தொழில்நுட்பக்கல்லூரி கட்டடவியல் துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற
லயன்ஜெரா என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கத்தில் 300க்கும்
மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்டடவியல்
துறைத்தலைவி ஜி.அனுஷா தலைமை வகித்தார். பேராசிரியர் என்.அருணாச்சலம்
வரவேற்றார். மருதம் குழுவின் துணைத் தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன் கலந்துகொண்டு
முதலிடம் பிடித்த மாணவ,மாணவியர்களுக்கு பரிசுக்கோப்பை வழங்கினார். பல்வேறு
மாநிலங்களில் இருந்து வந்த 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆய்வுக்
கட்டுரைகள் சமர்ப்பித்தனர். விழாவில் கருத்தரங்கம், நிலஅளவை, கைவினைஞர்
மற்றும் புதையல் வேட்டை போன்ற போட்டிகள் நடைபெற்றன.

0 comments:
Post a Comment