இந்தியாவை வழிநடத்தும் வல்லமை உள்ள தலைவி ஜெயலலிதா
மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசாரத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு.
மேட்டுப்பாளையம்.மார்ச்.30.நீ லகிரி பாராளுமன்ற தொகுதி அண்ணா
தி.மு.க.வேட்பாளர் சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து,அண்ணா தி.மு.க.கொள்கைபரப்பு
துணைசெயலாளர் நாஞ்சில் சம்பத் ,மேட்டுப்பாளையம் நகரில் தேர்தல் பிரச்சாரம்
செய்தார்.நிகழ்ச்சிக்கு நீலகிரி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அமைப்பு
செயலாளர் ஏ.,கே.செல்வராஜ் தலைமை தாங்கினார்.ஓ.கே.சின்னராஜ்
எம்.எல்.ஏ,மேட்டுப்பாளையம் தொகு தி செயலாளர் எம்.எஸ்.ராஜகுமார், காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி,ஆகியோர் முன்னி லை
வகித்தனர்.மேட்டுப்பாளையம் நகர செயலாளர் ஏ.வான்மதி சேட்,வரவேற்று
பேசினார்.கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது; அண்ணா தி.மு.க.வின்
பிரதமர் பதவிக்கு தகுதியானவர் முதல்வர் ஜெயலலிதா.ஆனால்.தி.மு.க.வின்
பிரதமர் யார் என்று சொல்லமுடியுமா.?காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை
மீட்கவேண்டியது நமது அனைவரின் கடமை.இந்தியாவில் ஒரு வரலாற்று மாற்றம்
வரப்போகிறது.இந்தியாவை ஆளும் வல்லமை உள்ள ஒரே தலைவி ஜெயலலிதா. இந்தியாவின்
பிரதமர் மகுடம் தமிழகதிற்கு கிடைக்க அண்ணா தி.மு.க.வேட்பாளர்களுக்கு இரட்டை
இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்.40 தொகுதிகளிலும்
அமோக வெற்றிபெற்று முதல்வர் அம்மாவை பிரதமர் ஆக்கவேண்டும்.
கடந்த தி.மு.க.ஆட்சியில்புதிய மின்திட்டங்களுக்கு எந்த முயற்சிகளும்
எடுக்காததால்,தற்போது மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தி.மு.க.ஆட்சியி ல்
மின்வாரியம் ரூ.56 ஆயிரம் கோடி கடனில் இருந்தது.அதனை அடைத்து தற்போது
மின்விநியோகம் சீராக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துவருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என மு.க.ஸ்டாலின் நேற்று இங்கு பிரச்சாரம் செய்துள்ளார்.வடமாநிலங்களில், தெ லுங்கானா, பிரச்சனை
உள்ளது போல் தமிழ்நாட்டில் கலவரம் நடக்கிறதா?.சட்டம் ஒழுங்கு நன்றாக
உள்ளது. மக்கள் அமைதியாக உள்ளனர்.இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாக
உள்ளது. இந்தியா அமைதியாக திகழ அண்ணா தி.மு.க.வின் முதல்வர் ஜெயலலிதா பாரத
பிரதமராக அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற
செய்யவேண்டும்.இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.பின்னர்
காரமடை,சிறுமுகை,உட்பட பகுதிகளில் நீலகிரி தொகுதி அண்ணா தி.மு.க.வேட்பாளர்
சி.கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
0 comments:
Post a Comment