தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, March 11, 2014

கூட்டணிக்காக வேறு எந்தக் கட்சிகளையும் எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கவில்லை - திமுக தலைவர் கருணாநிதி



திமுக தேர்தல் அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டபின், நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி: 

உங்கள் கூட்டணிக்கு வர மாட்டோம் என்று இடதுசாரிகள் தெரிவித்திருக்கிறார்களே?
அதைப் பற்றி எனக்குத் தெரியாது. 

ஜெயலலிதா பிரதமராக முயற்சி செய்வதால், தமிழக மக்கள் அவருக்குத்தான் வாக்களிப் பார்கள் என்று சொல்கிறார்களே?
அவர் முயற்சி செய்வதும் தெரி யாது. தமிழக மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பார் கள் என்பதும் தெரியாது. 

பாஜக சார்பாக புதிய கூட்டணி உருவாகியிருப்பது, திராவிடக் கட்சிகளுக்கு எந்த அளவுக்கு சாதக, பாதகங்களை ஏற்படுத்தும்?
ஏற்கெனவே எப்படி அமைந்ததோ, அப்படித்தான் இப்போதும் அமையும். 

மோடிதான் பிரதமர் என்று கூறி பாஜகவும், ராகுல் காந்திதான் பிரதமர் என்று காங்கிரஸும் பிரச்சாரம் செய்யும் நிலையில், திமுக யாரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும்?
இவர்கள் அல்லாத ஒருவரை. 

திமுக வேட்பாளரை எதிர்த்து தஞ்சை, புதுக்கோட்டையில் கொடும்பாவி எரித்ததைப் பற்றி?
அதைப் பற்றி எனக்குத் தெரியாது. 

தமிழகத்தில் இந்த முறை பல முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதைப் பற்றி உங்கள் கருத்து?
மக்களுக்கு ஆதாயம்தான். 

காங்கிரஸ் கட்சி உங்கள் அணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்களே?
இவை எல்லாம் உங்கள் யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள். ஆனால், காங்கிரஸ் கட்சியை நீங்கள் ஏன் இந்த அளவுக்கு குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று எனக்குத் தெரிய வில்லை. 

திமுக வேட்பாளர் பட்டியலில், இளைஞர்களுக்கு 30 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் 30 சதவீதம் தரப்படவில்லையே?
30 சதவீதத்துக்கு மேலாகவே இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 

உங்கள் கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளதா?
எங்களைப் பொறுத்தவரை வேறு கட்சிகள் எதையும் எதிர்பார்க்கவில்லை. எந்தக் கட்சியினர் வருவார்கள் என்று காத்திருக்கவில்லை. 

இந்தத் தேர்தலில், எந்த ஒரு தேசியக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகிறீர்கள். இது உங்களுக்கு பின்னடைவு இல்லையா?
எந்தப் பின்னடைவும் ஏற்படாது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

0 comments:

Post a Comment