| பண்ணாரி கோவில் நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள கழிப்பிட வளாகம் பூட்டியே கிடப்பதால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது |
புகழ்பெற்ற பண்ணாரியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா வருகின்ற 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. லட்சகணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தந்து பண்ணாரியம்மனை தரிசித்து செல்வர். பண்ணாரியம்மன் திருக்கோவில் பூச்சாட்டுதல் துவங்கிய பின் நாள்தோறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பண்ணாரி கோவில் நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள கழிப்பிட வளாகம் பூட்டியே கிடப்பதால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுகழிபிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment