கார் மோதி பிளஸ் 2 மாணவி பலி
சத்தியமங்கலம்,மார்ச் 14:
பைக்கில் பயணம் செய்த பிளஸ் 2 மாணவி தேன்மொழி மீது கார் மோதியதில் சிகிச்சை பலனின்றி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
புன்செய் புளியம்பட்டியை அடுத்துள்ள மாராயிபாளையத்தைச்
சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் தேன்மொழி புளியம்பட்டியில் உள்ள
தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை
பிளஸ் 2 தேர்வெழுவதற்காக உறவினர் சுப்பிரமணியம் என்பவர் பைக்கில் தேன்மொழி
பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். சத்தி கோவை சாலையில் பின்னால் வந்த கார்
பைக் மீது மோதியதில் தேன்மொழி படுகாயமடைந்தார்.அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ்
ஊழியர்கள் மாணவியை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
மாணவி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து புன்செய் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment