சத்தி அருகே பவானிஆற்றில் மூழ்கி 2 சகோதரர்கள் பலி
சத்தியமங்கலம்,மார்ச் 20:
சத்தி அருகே பவானிஆற்றில் குளிக்க சென்ற 2 சகோதரா்கள் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள புதுக்கொத்துக்காடு
கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன்கள்
மோகன்ராஜ்(14),ஜீவானந்தம்(10) ஆகியோர் கொத்துக்காடு ஊராட்சி
நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ளூர் திருவிழா
நடைபெற்றுவருவதால் வியாழக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இவர்கள் வியாழக்கிழமை காலை கொத்துக்காடு பவானிஆற்றில்
குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது,ஜீவானந் தன் ஆழமாக பகுதிக்கு
சென்றதாக கூறப்படுகிறது.நீரில் மூழ்கிய அவரை காப்பாற்றுவதற்காக மோகன்ராஜூம்
அங்கு சென்றபோது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அங்கு வந்த கிராமமக்கள்,ஆற்றங்கரையோரம் கிடந்த
மாணவர்களின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.இச்சம்பவம் குறித்து சத்தி போலீஸார் வழக்குப்பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.
உடன்பிறந்த சகோதர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
Post a Comment