தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, March 14, 2014

புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு
வீடு புகுந்து செயின் பறிக்க முயற்சி: இளைஞர் கைது
 
சம்பவம் நடந்த சந்திரவின் வீடு
வீடு புகுந்து செயினை பறிக்க முயன்ற நபரை பொதுமக்கள் துரத்திபிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

புஞ்சைபுளியம்பட்டி சரோஜினி வீதியை சேர்ந்த நடராஜ் மனைவி சந்திரா(45). இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை வீட்டில்  மாவு அரைக்கும் பணயியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வீட்டுக்கு வந்த இளைஞர் ஒருவர் தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது.

சந்திரா சமையறைக்கு சென்றபோது பின்தொடர்ந்து வந்த அந்த இளைஞர் சந்திரா மீது தாக்குதல் நடத்தி செயிலை பறிக்க முயன்றார். செயினை தர மறுத்தபோது கல்லால் சந்திராவை தாக்கிவிட்டு  இளைஞர் தப்பியோடினார். சந்திராவின் சப்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டுகாரர்களிடன் சந்திரா நடந்த சம்பவத்தை தெரிவித்து திருடவந்த நபரின் அடையாளங்களை காட்டினார்.

இதற்கிடையில், தப்பியோடி இளைஞரை அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து பு.புளியம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.  பிடிபட்டவர் திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்தது. பொதுமக்கள்தாக்கியதால் காயமடைந்த கண்ணன், சத்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

0 comments:

Post a Comment