தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, March 12, 2014

சத்தியில் கார்ப்பரேஷன் வங்கி நிறுவனர் தினவிழா



சத்தியமங்கலம் அருகே கோணமூலை ஊராட்சி காந்திநகர் கார்ப்பரேஷன் வங்கியில் 109 வது ஆண்டு நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது. 

இந் நிகழ்ச்சிக்கு கிளை மேலாளர் சரவணக்குமார்,காசாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.கோணமூலை ஊராட்சித்தலைவர் எஸ்.பத்மினி சண்முகம் வரவேற்றார். 

விழாவில் கோவை மண்டல வணிகத்துறை தலைவர் கே.டி.கவுடா தலைமை தாங்கி புதன்கிழமை பேசியது: கோவை மண்டலத்தில் 68 கிளைகள் உள்ளன. கிராமப்புறங்களில் வங்கி சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இங்கு சத்தி கிளை துவங்கப்பட்டுள்ளது.  வேளாண்மை, சிறுதொழில், வணிகம், நகைக்கடன்கள் மற்றும் வீட்டுக்கடன்கள் வழங்கப்படுகிறது. சேமிப்புகணக்குகள் துவங்க குறைந்தபட்ச இருப்பு ரூ.250 மட்டும் வசூலிக்கப்படுகிறது.இதில் ஏடிஎம் கார்டு வசதி, காசோலை புத்தக வசதி உண்டு. மேலும் எஸ்எம்எஸ் பேங்கிங், மொபைல் பேங்கிங், இண்டர்நெட் பேங்கிங் போன்ற நவீன சேவைகளும், பாதுகாப்பு பெட்டக வசதியும் உள்ளது.

 டெபாசிட் செய்யும் முத்த குடிமக்களுக்கு வட்டி 0.5 சதவிகிதம் அதிகமாக வழங்கப்படுகிறது. கார்ப்பரேஷன் வங்கிக்கு வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிப்பதிலும், மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள் வழங்கியதிலும் பொதுத்துறை வங்கிகளில் சிறந்த வங்கி என மத்திய அரசின் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இத்தகை வங்கி சேவைகளை இப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இவ்விழாவில் வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment