வாசிப்பில் கிடைக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைக்காது: ஈரோடு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் பேச்சு
ஈரோடு மாவட்ட மைய நூலகம், நவீன டிஜிட்டல் நூலகம் மற்றும் வாசகர் வட்டம் ஆகியன இணைந்து செவ்வாய்க்கிழமை நடத்திய நூலகர் தின விழாவில் நூலகத் தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் பேசியதாவது:
நினைவாற்றலை பெருக்க உதவுவது வாசிப்பு பழக்கமாகும். ஆனால் இப்போது தொலைக்காட்சிகள் நமது நேரத்தை அதிக அளவு ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் காலை எழுந்தவுடன் இ-மெயில், பின்பு கனிவு கொடுக்கும் யூ ட்யூப், மாலை முழுதும் இன்டர்நெட் என்று உள்ளனர்.
பாரம்பரிய மரபுகளை நாம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். வாசிப்பதால் இன்பம் கிடைக்கிறது. வாசிப்பில் கிடைக்கும் என்பம் வேறு எதிலும் கிடைக்காது.
வாசிப்பதன் மூலமாக அனுமானங்களை யூகிக்க முடியும். இளம் வயதில் வாசிக்கும் பழக்கம் முக்கியமானது. பால்ய நினைவுகள் என்றும் மங்குவதில்லை. வாசிப்பு பழக்கம் சிந்திக்க வைக்கிறது. வாசிப்பு என்பது நேசிப்பை விட சுவாசிப்பாய் இருக்கவேண்டும். நாம் நம் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை கற்றுத் தர வேண்டும் என்றார்.
இவ்விழாவில், அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைச் சேர்த்த கொடுமுடி கிளை நூலகர் அய்யாசாமிக்கு முதல் பரிசும், அந்தியூர் கிளை நூலகர் பூங்குன்றனுக்கு 2-ஆவது பரிசும், ஊர்ப்புற நூலக அளவில் ஆயிகவுண்டன்பாளையம் ஊர்ப்புற நூலகர் அ.நல்லசாமிக்கு முதல் பரிசும், எழுமாத்தூர் ஊர்ப்புற நூலகர் விவேகானந்தனுக்கு 2-ஆவது பரிசும், அதிக எண்ணிக்கையில் புரவலர்களைச் சேர்த்த சூரியம்பாளையம் நூலகர் பொன்னுசாமிக்கு முதல் பரிசும், கோபி நூலகர் இரா.யுவராஜுக்கு 2-ஆவது பரிசும், ஊர்ப்புற நூலகத்துக்கு ஈரோடு எம்.ஆர்.சி. நகர் ஊர்ப்புற நூலகர் அமுதாவுக்கு முதல் பரிசும், அதிக அளவில் நன்கொடை பெற்ற மொடக்குறிச்சி நூலகர் ரகுபதி, சிவகிரி நூலகர் பெரியசாமி, நம்பியூர் நூலகர் ராமலிங்கம் ஆகியோருக்கும், சிறப்பாக செயல்பட்டு வரும் வாசகர் வட்டத்தைச் சார்ந்த பொறுப்பாளர்களுக்கு பரிசுகளையும், நூலகப் புரவலர்களுக்கு சான்றிதழ்களையும் ஆட்சியர் வே.க.சண்முகம் வழங்கினார். விழாவில் மாவட்ட நூலக அலுவலர் (பொ) இரா.கோகிலவாணி, ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்புத் தலைவர் என்.சிவநேசன், நவீன டிஜிட்டல் நூலக வாசகர் வட்டத் தலைவர் பி.ரவீந்திரன் மற்றும் அனைத்து நூலகங்களின் நூலகர்கள் கலந்துகொண்டனர்.
வாசிப்பில் கிடைக்கும் இன்பம் வேறு எதிலும் கிடைக்காது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் பேசினார்.

0 comments:
Post a Comment