பண்ணாரி வனத்தில் மகன் கொலை:தந்தை உள்பட 2 பேர் கைது
மகனை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை துரைசாமி மற்றும் செல்வன்
சத்தியமங்கலம், ஆக.29. பண்ணாரியம்மன் கோயில் தெப்பக்குளம் அருகே நேற்று
முன்தினம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக்கிடந்த
திருப்பூரைச் சேர்ந்த டெய்லர் பாண்டியனை தந்தையே ஆள் வைத்து கொன்றது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் தினமும் மது அருந்துவதற்கு காலை
மற்றும் மாலை இரு வேளைகளிலும் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததாகவும்,
குடித்துவிட்டு வந்து தன்னையும் தன் மனைவி சந்திரா (50) வையும் கையில்
கிடைத்த பொருட்களால் அடித்து துன்புறுத்தியதாகவும், இரவில் தூங்கவிடாமல்
தொந்தரவு செய்ததாகவும், சாப்பிடும்போது தட்டை காலால் உதைப்பதாகவும்
கூறினார். விடிய விடிய டார்ச்சர் செய்துகொண்டே இருந்ததால் பாண்டியனை
கொன்றுவிட முடிவு செய்து வரப்பள்ளத்தை சேர்ந்த மருந்தடிக்கும் தொழிலாளி
செல்வன்(30) என்பவரை அணுகி மகனை கொல்ல ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும்
செல்வன் வேறொரு நண்பரை ஏற்பாடு செய்து தந்ததாகவும், இதற்கிடையே நேற்று
முன்தினம் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளியின் மகள் திருமணத்திற்கு
சென்ற பாண்டியன் பண்ணாரியில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக கூறினார்.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது இச்சம்பவத்தில் 3 பேர்
சம்பந்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் பிடிபடுவார்கள் எனவும் கூறினர்.
துரைசாமி மற்றும் செல்வன் ஆகிய இருவரை சத்தியமங்கலம் போலீசார் கோர்ட்டில்
ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
0 comments:
Post a Comment