தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 4, 2014

புஞ்சைபுளியம்பட்டியில் 30 லட்சம் மதிப்பில் சுகாதாரமான முறையில் நவீன ஆடுவதைக்கூடம் திறப்பு விழா.


 
 
புஞ்சைபுளியம்பட்டி;ஆகஸ்ட்;5;

புஞ்சைபுளியம்பட்டியில் 30 லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரமான முறையில் கட்டப்பட்டுள்ள நவீன ஆடுவதைக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம்,புஞ்சைபுளியம்பட்டியில் சுகாதாரமான முறையில் நவீன ஆடுவதைக்கூடம்,30 லட்சம் மதிப்பீட்டில்,வாரச்சந்தை வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.இதன்  திறப்பு விழா நிகழ்ச்சிக்கு,நகராட்சி ஆணையாளர் கே.செந்திவேல் தலைமை வகித்தார்.நகராட்சி துணைத்தலைவர் டி.பாபு,ஏல உரிமைதாரர் அ.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி தலைவர் பி.எஸ்.அன்பு,நவீன ஆடுவதைக்கூடத்தை துவக்கிவைத்தார்.

இந்த,நவீன ஆடுவதைக்கூடத்தில்,ஆடுகளை அடைத்து வைப்பதற்கு,தனி அறைகள்,கழிவுகள் சென்று சேர்வதற்கு நிலமட்டத்தொட்டிகள் மற்றும்,கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கு,
மூன்று மோட்டார்கள் அடங்கிய  சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும்,சோலார் வசதியுடன் கொதிகலன்
அமைக்கப்பட்டுள்ளது.

 நவீன ஆடுவதைக்கூடத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து,நகராட்சி ஆணையாளர் கே.செந்திவேல்,கூறும்போது;
மண்டத்திலேயே,முதன் முறையாக,அனைத்து வசதிகளுடன் கூடிய,
சுகாதாரமான முறையில் நவீன ஆடுவதைக்கூடம்,புஞ்சைபுளியம்பட்டியில்,அமைக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடைக்காரர்கள்,தங்களது ஆடுகளை,அவரவர்களின் பொறுப்பில் இங்கு அடைத்துவைத்து கொள்ளலாம்.கால்நடை மருத்துவர் ஆய்வு செய்த பின்பு,தகுதியான ஆடுகளை,ஏல உரிமைதாரர்,சீல் வைப்பார்.பின்னர்,ஆடுகள் வதைக்கப்படும்.இதனால்,இறந்த ஆடுகளை பயன்படுவது,முற்றிலும் தடுக்கப்படும்.மேலும்,சீல் இல்லாத ஆடுகளை,இறைச்சி கடைக்காரர்கள்,விற்பனை செய்வது கண்டறியப்பட்டால்,அவர்கள் மீது,நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்,சீல் இல்லாத ஆடுகளை,
ஏல உரிமைதாரர்,பறிமுதல் செய்து,நகராட்சி அலுவலகத்தில்,ஒப்படைப்பார்.எனவே,சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்டுள்ள,இந்த, நவீன ஆடுவதைக்கூடத்தை,இறைச்சி விற்பனை கடைக்காரர்கள்,பயன்படுத்திக்கொள்ள,புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி மூலம்,அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு நகராட்சி ஆணையாளர் கூறினார்.

நிகழ்ச்சியில்,சுகாதார ஆய்வாளர் வீரபாகு,நகராட்சி மேற்ப்பார்வையாளர் சோமசுந்தரம்,ஏல உரிமைதாரர் அ.ரவிச்சந்திரன்,பழனிச்சாமி,கோவிந்தராஜ்,மற்றும் ,நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment