தாளவாடி தனி தாலுகா - பி.எல்.சுந்தரம் எம்.எல்.ஏ விற்கு வரவேற்பு
தாளவாடி, செப் 10:
தாளவாடி மக்களின் நீண்ட நாள் கனவான தனி தாலுகா நனவாக பெரிதும் முயற்சி எடுத்த பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திரு பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு இன்று தாளவாடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரின் நுழைவாயிலிலேயே பொது மக்களும், கட்சி தோழர்களும் திரண்டிருந்து வரவேற்பு அளித்தனர். பறை முழங்கிட ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மாலைகளையும், துண்டுகளையும் அணிவித்தனர்.

பின்னர்
பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், இந்த அறிவிப்பினை மாண்புமிகு. முதல்வர்
அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். நமது மாவட்ட அமைச்சர் மாண்புமிகு.
என்.டி.வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சி தலைவர். திரு.எஸ்.ஆர்.எஸ், நமது மாவட்ட
அதிகாரிகள், தலைமை செயலகத்தில் பணியாற்றும் பல அதிகாரிகள் ஆகிய அனைவரின்
முயற்சியில் இந்த நல்லகாரியம் நடந்துள்ளது. உங்கள் சார்பில் அனைவருக்கும்
நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

0 comments:
Post a Comment