தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, November 27, 2013

அய்யப்ப பக்தர்கள் வருகையால் பண்ணாரி அம்மன் கோவிலில் கூட்டம் அதிகரிப்பு
*****************************************************************************************************************

சத்தியமங்கலம், நவ.28
சத்திய மங்கலம் அருகே உள்ள பண்ணாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியை யொட்டி உள்ள இந்த கோவிலில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
தற்போது சபரிமலை அய்யப்பமார்கள் சீசனை யொட்டி பண்ணாரியம்மன் கோவிலுக்கு கடந்த சில நாட்களாக வரும் கூட்டம் அதிகரித்து உள்ளது.
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் இங்கு வந்து பண்ணாரியம்மனை வழிபட்டு போகிறார்கள். பண்ணாரி, தாளவாடி, ஆசனூர், சத்திய மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து வணங்கிவிட்டு சபரி மலை புறப்பட்டு செல்கிறார்கள்.

இதேபோல் சாம்ராஜ் நகர், மைசூர், கொள்ளேகால் உள்பட கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்களும் செல்லும் வழியில் பண்ணாரியம்மன் கோவிலில் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு பண்ணாரி அம்மனை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
இதனால் பண்ணாரியம்மன் கோவிலில் பகல்–இரவு என பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளனர்.

0 comments:

Post a Comment