தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, November 12, 2013

புன்செய் புளியம்பட்டி கிளை நூலகம் முழுநேர நூலகமாக தரம் உயர்வு
நூலகம் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை செயல்படும்.
**********************************************************************************************************


                 ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி கிளை நூலகம் 10 - 02 - 1954 ஆம் ஆண்டு அமைக்கபட்டது. 58 ஆண்டுகள் பழமை வாய்ந்த புன்செய் புளியம்பட்டி கிளை நூலகம்  ஆரம்பத்தில் வாடகை கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் செயல் பட்டு வந்தது. பின்னர் 01 - 04 - 1995 முதல் கிளை நூலகம் சொந்த கட்டிடத்தில் செயல் பட்டு வருகிறது. தற்போது புன்செய் புளியம்பட்டி கிளை நூலகம் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்து உள்ளது. கிளை நூலகம் சொந்த கட்டிடத்தில் இயங்கினாலும் அதன் மேல்கூறை சிதிலம் அடைந்து இருந்தது. மழைகாலத்தில் முழுவதும் ஒழுகி புத்தகங்கள் சேதம் அடைந்து வந்தது. நூலகத்தை சுற்றிலும் மதில் சுவர் இல்லாததால் செடி கொடிகள் வளர்ந்து வனாந்திரமாக காட்சிஅளித்தது. தினசரி மார்க்கெட்டின் குப்பைகள் கொட்டபடுவதால் அசுத்தமாக இருந்தது. இந்நிலை மாற வேண்டும் என புத்தக ஆர்வலர்கள் மிகவும் ஆசைபட்டார்கள். கடந்த ஆண்டு புன்செய் புளியம்பட்டி கிளை நூலகத்தில் நடைபெற்ற தேசிய புத்தக வாரவிழாவில்  வாசகர் வட்டம் சார்பில் ஒரு குழு அமைக்கபட்டது. இக்குழுவில் கிளை நூலகர் ந.பழனிச்சாமி, வாசகர்வட்ட தலைவர் மு.கனகராஜ், பொருளாளர் ஞான தண்டபாணி, விடியல் செயலாளர் எஸ். ஜெயகாந்தன், கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ந.பழனிசாமி ஆகியோர் செயல்பட்டார்கள்.
                 முதலில் பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெற்று கிளை நூலகத்தின் மேல்கூறைக்கு சுமார் 50000 ரூபாயில் சுருக்கி அமைக்கபட்டது. தற்போது கிளை நூலகம் மழை நீர் உள்புகாமல் பாதுகாப்பாக உள்ளது. அதேபோல் கிளை நூலகத்தை சுற்றிலும் மதில் சுவர் அமைந்து தரவேண்டும் என பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு பி. எல். சுந்தரம் அவர்களிடம் வாசகர் வட்டம் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று கொண்ட அவரும் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து 1 . 50 லட்சம் செலவில் மதில் சுவர் அமைத்து தந்துள்ளார். அதேபோல் தன்னிறைவு திட்டம் மூலம் பண்ணாரிஅம்மன் ரூரல் பௌன்ட்டேசன் மூலம் ஆண் மற்றும் பெண்களுக்கு தனியாக கழிவறை கட்டப்பட்டுள்ளது. நூலகத்திற்கு தனி குடிநீர் இணைப்பு  பெறப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் பயன் பெரும் வகையில் புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கிளை நூலகத்திற்கு செல்ல நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் புன்செய் புளியம்பட்டி கிளை நூலகம் புது பொலிவுடன் செயல் பட துவங்கி உள்ளது.
                இது குறித்து புன்செய் புளியம்பட்டி கிளை நூலகர் ந. பழனிசாமி கூறி உள்ளதாவது, புன்செய் புளியம்பட்டி கிளை நூலகம் தற்போது பல்வேறு மாற்றம் கண்டு சிறப்பாக இயங்குகிறது. பகுதிநேர நூலகமாக இருந்த கிளை நூலகம் தற்போது முழுநேரமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.நூலகம் காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை செயல்படும்.  பெண்கள் படிக்க தனி வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது புன்செய் கிளை நூலகத்தில் 3500 உறுப்பினர்கள் உள்ளனர். பல்வேறு தலைப்புகளில் 26000 இக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ மாணவியர்களின் தேர்வு சம்பந்தமான புத்தகங்களும் மற்றும் போட்டி தேர்வுகளில் பங்கு பெறுவோர் பயன் பெரும் வகையில் பல புதிய புத்தகங்கள் வாசகர் வட்டம் சார்பில் வாங்கப்பட்டுள்ளன. புதிய வாசகர் உறுப்பினர்கள் சேர்கை நடைபெறுகிறது. ஒரு நூல் எடுக்க காப்பு தொகை ருபாய் 15 மற்றும் ஆண்டு சந்தா ருபாய் 5 செலுத்த வேண்டும். இரு  நூல் எடுக்க காப்பு தொகை ருபாய் 25 மற்றும் ஆண்டு சந்தா ருபாய் 5 செலுத்த வேண்டும்.  மனித வாழ்க்கையை மாற்றும் அறிவு திருகோவில்களாக நூலகங்கள் திகழ்கின்றன. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் நூலகத்தை முழுமையாக பயன் படுத்த வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

0 comments:

Post a Comment