சத்தியமங்கலம் கிராமங்களில் பண்ணாரிஅம்மன் வீதி உலா
சத்தியமங்கலம், மார்ச் 25:
பண்ணாரியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரிஅம்மன் சப்ரத்துக்கு கிராமமக்கள் மலர்கள் தூவி வரவேற்றனர்.

பிரசித்தி பெற்ற
அருள்மிகு பண்ணாரியம்மன் கோயில் விழா திங்கள்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன்
துவங்கியது. கோயில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட
பண்ணாரி்அம்மன் உற்வசர் புதன்கிழமை காலை சிக்கரம்பாளையம் வந்தடைந்தது.
அங்கு வழிநெடுகிலும் மக்கள் மலர்களைதூவி அம்மனை வரவேற்றனர். இக்கிராமம்
முழுவதும் அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள்பாலித்துவிட்டு சப்பரம்
அன்றிரவு வெள்ளியம்பாளையம் புறப்பட்டு சென்றது.
தொடர்ந்து மார்ச்.26-ஆம் தேதி (இன்று) வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், முடுக்கன்துறை வழியாக தொட்டம்பாளையம் சென்றடையும். 27-இல் வெள்ளியம்பாளையம்புதூர்,அக்கரைத்தத்தப்பள்ளி கிராமங்களில் வீதி உலாவும் 28-ஆம் தேதி அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர் ஆகிய கிராமங்களில் வீதியுலா நிறைவுற்றதும் அம்மன் சப்பரம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோயிலில் தங்குகிறது.
29,30-இல் சத்தியமங்கலம் நகர்ப்புறத்தில் திருவீதியுலா காட்சியளிக்கும். 31-ம் தேதி கோம்புப்பள்ளம் மாசான பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பட்டவர்த்தி அய்யம்பாளையம்,மாரியம்மன் கோயிலுக்கு சென்றடையும். . பிற்பகலில் புதுவடவள்ளி, புதுக்குய்யனூர்,ராஜன்நகர் வழியாக செவ்வாய்க்கிழமை மீண்டும் கோயிலை சென்றடைந்ததும். அன்றிரவு கோயிலில் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கோயிலில் தினமும் மலைவாழ் மக்கள் தாரை,தப்பட்டை, பீனாட்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடும் களியாட்டமும், நித்தியப்படி பூஜையும் . ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு திருக்குளம் சென்று அம்மன் அழைத்து வருதலும் 7-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது. 13-ஆம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவுபெறும்.

0 comments:
Post a Comment