தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 11, 2014

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் கரும்புகளை துவம்சம் செய்த 3 காட்டுயானைகள் - சொட்டுநீர் பாசனக்குழாய்கள் சேதம்  

 



சத்தியமங்கலம்,ஜூலை 3:
தாளவாடி அடுத்துள்ள கர்நாடக வனத்தையொட்டி உள்ள  துரைசாமி என்பவரின் தோட்டத்தில் குட்டியுடன் புகுந்த காட்டுயானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்புகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளன.

தமிழக கர்நாடக எல்லையில் தாளவாடியில் இருந்து 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது ராமபுரம் கிராமம். கர்நாடக வனத்தையொட்டியுள்ள இக்கிராமத்தில் கரும்புப்பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கரும்புகளை தின்று பழகிய யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை துரைசாமி என்பவரின் தோட்டத்துக்குள் குட்டியுடன் புகுந்த 2 ஆண்யானைகள் கரும்புப்பயிர்களை தின்று அங்கேயே முகாமிட்டன. அங்கு வந்த கிராமமக்கள் பிற தோட்டத்துக்குள் யானைகள் புகுந்துவிடாதபடி பட்டாசு வெடித்து அவைகளை விரட்டும் முயற்சி ஈடுபட்டனர். 

ஆனால், யானைகள் தோட்டத்தை விட்டு வெளியேவில்லை.இதற்கிடையில், 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் திரண்டு வந்த யானைகளை துரத்தியதால் அவை கரும்புப்பயிர் மறைவில் நின்றுகொண்டு காட்டுக்குள் செல்ல தயங்கின. தகவலறிந்து அங்கு வந்த தாளவாடி வனச்சரக அலுவலர் உதயராஜ் மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் யானைகளை விரட்டினர். யானைகள்  செல்லும் வழித்தடத்தில் கிராமமக்கள் நின்று வேடிக்கை பார்த்ததால் அவை திரும்பி செல்லமுடியாமல் கரும்புத்தோட்டம் முழுவதிலும் வலம் வந்து 3 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகளை துவம்சம் செய்தன. மேலும்,தோட்டத்தில் போடப்பட்ட சொட்டுநீர் பாசன குழாய்களை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

சுமார் 12 மணி நேரம் போராடியும் யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் காத்திருந்தனர். மாலை 6 மணியளிவில் வனத்தறை ஊழியர்கள் மற்றும் கிராமமக்கள் தீப்பந்தம் ஏந்தியும் பட்டாசு வெடித்தும் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

0 comments:

Post a Comment