தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 7, 2014

திம்பம் மலைப்பாதையில் டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி. 






திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 27 அபாயகரமான கொண்டைஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. பவானிசாகர் அண்ணாநகரிலிருந்து கர்நாடகத்திற்கு ஜல்லி பாரம் ஏற்றிய டிப்பர் லாரி சனிக்கிழமை திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. லாரியை கோபி கரட்டடிபாளையத்தை சேர்ந்த டிரைவர் ஏ.அமானுல்லா(60) ஓட்டினார். 

9 வது கொண்டை ஊசிவளைவில் சென்றபோது லாரியை வளைவில் திருப்ப முடியாததால் டிரைவர் அதனை பின்னோக்கி நகர்த்தியபோது அதிகபாரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி. ஜல்லிபாரத்துடன் மலைச்சரிவில்  மரக்கிளை உடைத்துக் கொண்டு உருண்டு 8வது பாதையில் பயங்க சப்தத்துடன் தலைகுப்புற விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அமானூல்லா சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். 

லாரி சாலையின் குறுக்கே விழுந்ததால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்து நின்றன. விபத்து குறித்து உடனடியாக ஆசனூர் போலீஸ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அங்கு வந்த போலீஸார் சடலத்தை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

விபத்து காரணமாக இரு மாநிலங்களிடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் தங்கள் குழந்தைகளுடன்  7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பண்ணாரிக்கு நடைபயணமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து,  கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் இரு மாநிலங்களிடையே வாகனங்கள் இயக்கப்பட்டன. 

0 comments:

Post a Comment