பவானி நகராட்சி குப்பைக் கிடங்கில் பிடித்த தீயால் கரும்புகை!
பொதுமக்கள் பாதிப்பு
பொதுமக்கள் பாதிப்பு
பவானி
நகராட்சி குப்பைக் கிடங்கில் பிடித்து கொளுந்துவிட்டெறிந்த தீயால்
செவ்வாய்க்கிழமை இரவு கரும்புகை கிளம்பியது. இதனால், பொதுமக்கள் பெரிதும்
அவதிக்குள்ளாகினர்.
பவானி நகரில் உள்ள 27 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும், தினசரி சந்தை, திருமண மண்டபம், மருத்துவமனை கழிவுகளும் இங்கு கொட்டி குவிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கில் நாள்தோறும் புகை கிளம்பியபடியே காணப்படும்.
இந்நிலையில், குப்பைக் கிடங்களில் பரவலாக தீ பிடித்து கரும்புகை கிளம்பியது. இதனால், சுற்றுப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். காற்றடிக்கும் திசையெங்கும் புகை சென்றதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதுகுறித்து, பொதுமக்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன்பின்னரே புகை கிளம்புவது குறைந்தது. பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.
நகராட்சி குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பிடித்துக் கொள்வதும், அதனை அணைப்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இதுகுறித்து, பலமுறை தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் பாரமுகமாகவே உள்ளது. சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கு பிரச்னையில் அலட்சியமாக உள்ளது வேதனையளிப்பதாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

0 comments:
Post a Comment