யானைகள் புகுந்து வாழைகள் சேதம்
சத்தியமங்கலம், பிப்.6.
பவானிசாகர் அருகே தொப்பம்பாளையத்தில் கிராமத்தில் புகுந்த 3 யானை 200 க்கும் மேற்பட்ட வாழைகளை நாசப்படுத்தியது. பவானிசாகர்
வனச்சரகத்திற்குட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட
யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கோடேபாளையம், அம்மாபாளையம், வெள்ளாளபாளையம், நால்ரோடு, அண்ணாநகர், சொலவனூர், தொப்பம்பாளையம், கரிதொட்டம்பாளையம், புதுரோடு, விண்ணப்பள்ளி கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதம் செய்கின்றன. நேற்று இரவு 11 மணியளவில் விளாமுண்டி வனத்தை விட்டு வெளியேறிய 3 யானைகள் தொப்பம்பாளையம் புளியந்தோப்பு வழியாக எல்பீபி வாயக்காலின் வலது கரை வழியாக வநது காளியப்பன் தோட்டத்தில் புகுந்து ஜி9 மற்றும் கதலி ரக வாழைகளை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின. யானைகள் வாழையை முறிக்கும் சத்தம் கேட்ட விவசாயிகள் உடனடியாக யானைகளை பட்டாசு வெடித்தும் தீப்பந்தங்கள் காட்டியும் விரட்ட முயற்சித்தனர். யானைகள் அருகே உள்ள சுப்பைய்யன் என்பவரது தோட்டத்திலும் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளையும் நாசப்படுத்தின. 5 மணி நேர போராட்டத்திற்கு பின் அதிகாலை 4 மணியளவில் விளாமுண்டி வனப்பகுதிக்கு யானைகள் விரட்டியடிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 200 க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது. யானைகள் விவசாய விளைநிலங்களில்
புகாவண்ணம் தடுக்க அகழி வெட்டும் பணி முழுமை பெறாததாலும், எல்பிபி
வாய்க்காலை ஒட்டி உள்ள பகுதியில் அகழி வெட்டாததாலும் யானைகளால் தொடர்ந்து பயிர்சேதம் ஏற்பட்டு வருகிறது. அகழி வெட்டும்போது பாறைகள் உள்ளதால் குறிப்பிட்ட ஆழத்திற்கு வெட்டமுடியததால் யானைகள் சர்வசாதாரணமாக அகழியை தாண்டி வந்து விடுகின்றன. எனவே உடனடியாக அகழி வெட்டும் பணியை துரிதப்படுத்தி பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments:
Post a Comment