காட்டுப்பன்றி வேட்டை: 108 நாட்டுவெடிகுண்டுடன் விவசாயி கைது
![]() |
காட்டுப்பன்றி வேட்டை: 108 நாட்டுவெடிகுண்டுடன் விவசாயி கைது
|
காட்டுப்பன்றியை
வேட்டையாடுவதற்காக பதுக்கி வைத்திருந்த 108 நாட்டுவெடிகுண்டுகளை
வனததுறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக
புளியம்கோம்பை விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் புளியம்கோம்பை
பகுதியில் நாட்டுவெடிகுண்டை பயன்படுத்தி காட்டுப்பன்றிகள்
வேட்டையாடப்படுவதாக சத்தி வனச்சரக அலுவலர் எஸ்.சண்முகத்திற்கு
ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியில்
தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பிசில் புளியம்கோம்பை என்ற இடத்தில்
மொபட்டில் சென்ற நபரை பிடித்து விசாரித்துபோது, சாக்குப்பையில் 108 நாட்டு
வெடிக்குண்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பிடிபட்டவர் அதே
பகுதியைச் சேர்ந்த பழனி மகன் அய்யாசாமி(40) என்பதும் அவரிடமிருந்து 108
நாட்டுவெடிகுண்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மொபட் மற்றும்
டார்ச் லைட்டையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

0 comments:
Post a Comment